வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (16:53 IST)

வன்னியர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்காலிகமானது என்றும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு விரிவான மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அரசின் இந்த உள்ஒதுக்கீடுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்நாட்டு மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்காமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் ஓபிசி பிரிவினரில் 22 சாதியை சேர்ந்தவர்களுக்கு வெறும் 2.5% மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றும், அரசியல் லாபத்துக்காக அரசு இதுபோன்ற உள்ஒதுக்கீடுகளை அறிவிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தி விரைவில் நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.