புதிய மொபைல் ஆப்ஸ்: திருப்பதி செல்ல எளிய வழி


K.N.Vadivel| Last Updated: சனி, 9 ஜூலை 2016 (12:41 IST)
திருப்பதி செல்ல பக்தர்கள் முன்பதிவு செய்ய புதிய மொபைல் ஆப்ஸ் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
 
 
உலக அளவில் புகழ்பெற்ற கோவில் திருப்பதி திருமலை. இங்குள்ள வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்ய இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி பல லட்சம் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
 
திருமலையில் சுவாமி தரிசனம் செய்யவும், அங்கு வாடகை அறை எடுக்கவும் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டது.
 
மேலும், இந்த வசதியை மொபைல் ஆப்ஸ் மூலம் அளிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக டாடா கன்சல்டன்சி நிறுவனம் மூலம் தொழில் நுட்ப ஆதரவு கோரப்பட்டுள்ளது. விரைவில் மொபைல் - ஆப்ஸ் வசதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :