திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (21:16 IST)

தினகரனுக்கு இருக்கும் ஒரே தகுதி இதுதான்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தமிழக அரசியலில் அதிமுக அமைச்சர்களும் தினகரன் தரப்பினர்களும் தினமும் பேட்டிகள், சமூக வலைத்தளங்கள், பொதுக்கூட்ட மேடை ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து வருவது வழக்கமான ஒன்றே
 
அந்த வகையில் இன்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 'தினகரனுக்கு சசிகலாவின் சகோதரி மகன் என்ற தகுதியை தவிர எந்த தகுதியும் இல்லை என்றும், அதிமுக ஆட்சியை கலைக்க திமுகவினரும், தினகரனும் கங்கணம் கட்டி அலைகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அமைச்சர் கூறியபோது, 'கிராம சபை கூட்டத்தில் தரையில் அமர்ந்து தன்னை எளிமையானவர் என்று காட்டிக்கொள்ள ஸ்டாலின் முயற்சி செய்வதாகவும், மக்கள் இதனை நம்ப மாட்டார்கள் என்றும் கூறினார்.
 
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் இந்த விமர்சனத்திற்கு டிடிவி தினகரன் மற்றும் மு.க.ஸ்டாலின் என்ன பதிலடி கொடுக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்