1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (15:57 IST)

நீட் தேர்வுக்கு ...விண்ணப்பிக்கும் தமிழக மாணவர் எண்ணிக்கை சரிவு !

சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசால் நாடு முழுவதும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இருந்து தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக  தேசிய தேர்வு முகமையின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு,நீட் தேர்வுக்கு 1,40,000 பேர் விண்ணப்பித்ததில், 1.23 லட்சம் பேர் தேர்வு எழுதி, அதில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
 
இந்நிலையில், நடப்பு  கல்வி ஆண்டில்  1 லட்சம் பேர் மட்டுமே நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
 
இதில், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைத்தல், நீட் தேர்வில் பழைய மாணவர்கள் அதிக பிடித்தல், புதிய பாடத் திட்டம் ஆகியவற்றின் காரணமாக நடப்பு ஆண்டில் நீர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.