ஆடியோவில் பேசும் குரல் என்னுடையது இல்லை : அமைச்சர் விளக்கம்

jeyakumar
Last Updated: திங்கள், 22 அக்டோபர் 2018 (19:34 IST)
கடந்த சில நாட்களாக ஒரு பெண்ணுடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது.
இதுகுறித்து அமைச்சர்  ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறிவதாவது:
 
சமூக வலைதளங்களில், வெளியாகியிருக்கும் ஆடியோ என்குரல் கிடையாது. எனது குரலில் ஆடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளது. என்மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் தினகரன் தரப்பினர் இவ்வாறு செய்து வருகின்றனர். மேலும் என்னைப் போன்று பல ஜெயக்குமார்கள் இருக்கின்றனர். யாரிடமும் நான் பேசவில்லை. இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

 
 


இதில் மேலும் படிக்கவும் :