திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (13:24 IST)

திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினம் மற்றும் குடியரசு தினங்களையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்க கூடாது- மாவட்ட ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில்,திருவள்ளுவர் தினம், வள்ளலார்  நினைவு தினம் மற்றும் குடியரசு தினங்களையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்படக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''திருவள்ளுவர் தினம் (16.01.2024), வள்ளலார் நினைவு தினம் (25.01.2024) மற்றும் குடியரசு தினம் (26.01.2024) ஆகிய தினங்களை முன்னிட்டு 16.01.2024, 25.01.2024 மற்றும் 26.01.2024 ஆகிய தினங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம்பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.