தடுப்பூசி விணாக்கியதில் தமிழ்நாடுதான் முதலிடமாம்!

Last Updated: புதன், 21 ஏப்ரல் 2021 (08:42 IST)

இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி வீணாக்கியதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 12 சதவீத தடுப்பூசிகள் அதிகபட்சமாக வீணாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகள் அடங்கிய குப்பியை உடைத்தால் நான்கு மணி நேரத்துக்குள் அதை பயன்படுத்திவிட வேண்டும். அதற்கு மேல் ஆனால் அதை பயன்படுத்த முடியாது. இப்படி பயன்படுத்த முடியாமல் போன கொரொனா தடுப்பூசிகள் மட்டும் தமிழகத்தில் 12 சதவீதம் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :