திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (18:19 IST)

அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஜேப்பியார் கல்வி நிறுவனம்… இத்தனைக் கோடி மதிப்பா?

ஜேப்பியார் அறக்கட்டளையால் 91 ஏக்கர் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னணிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஜேப்பியார் கல்வி குழுமம் இருந்து வருகிறது. எம்ஜிஆரிடம் பணியாற்றிய ஜேப்பியார் ஆரம்பித்த கல்வி நிறுவனத்தின் இன்றைய மதிப்பு பல ஆயிரக்கணக்கான கோடி இருக்கும்.

இந்நிலையில் சென்னையில் அரசுக்கு சொந்தமான 91 ஏக்கர் நிலத்தை இந்த கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை ஆக்கிரமித்துள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு 2000 கோடி. இதை மீட்டுள்ளதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.