700 ரூபாய் கொடுத்தால் வருடம் முழுவதும் முட்டை? – மோசடியை தடுத்த போலீஸ்!

Boiled eggs
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 30 ஜூலை 2021 (10:21 IST)
தமிழக தினசரிகளில் சமீபத்தில் முட்டை விநியோகம் குறித்த விளம்பரம் வெளியான நிலையில் அனுமதி பெறாத அந்நிறுவனத்தை குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர்.

சமீபத்தில் நாளேடுகளில் ரஃபோல் ரீடெயில்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் முட்டை விளம்பரம் ஒன்று பிரபலமானது. அதாவது ரூ.700 கட்டினால் வாரம் தோறும் 6 முட்டை என ஒரு வருடத்திற்கு வழங்கபடும் என்ற ரீதியிலான பல சலுகைகள் அந்த விளம்பரத்தில் இருந்தது.

இந்த விளம்பரத்தை கண்டு பலர் அந்நிறுவன கணக்கிற்கு பணம் அனுப்பிய நிலையில், இது மோசடி போல தெரிவதால் இதுகுறித்து விளக்கமளிக்க நிறுவனர் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர், அதன் பேரில் அந்த நிறுவனத்தை நடத்திய சிவம் நரேந்திரன் நேரில் ஆஜராகியுள்ளார்.

விசாரணையில் எந்த உரிமமும் இன்றி நரேந்திரன் அந்த நிறுவனத்தை நடத்தி வந்ததும், வங்கியில் பணம் அனுப்பியவர்களுக்கு முறையான ரசீது வழங்காததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பணத்தை மீண்டும் வாடிக்கையாளர் கணக்குகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த போலீஸார், அனுமதி பெறாத அந்த நிறுவனத்தையும் முடக்கியுள்ளனர். இதில் மேலும் படிக்கவும் :