திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (15:45 IST)

பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி: தமிழிசை சௌந்தரராஜன்

இந்தியாவை பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செயல் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
 பாரத தேசம் என்பது பெருமையை சேர்க்கும் ஒன்று என்றும் ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
அதன் காரணமாக பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும் பெரும்பாலான மக்கள் மனதை புண்படுத்தும் படியான ஒரு கருத்தை சொல்லி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
உங்களுக்கு வேண்டுமானால் சனாதனம் விளையாட்டாக இருக்கலாம் ஆனால் சனாதனத்தை பின்பற்றுபவர்களுக்கு அது விளையாட்டு அல்ல என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran