புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஜனவரி 2024 (17:07 IST)

உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: தமிழன் பிரசன்னா

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்பது மக்கள் விருப்பம் என திமுகவின் முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
 
அமைச்சர் உதயநிதி துணைவராவதில் தவறு ஒன்றும் இல்லையே? என்று கூறியவர் எப்போதும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைக்காத அளவுக்கு உதயநிதி மகத்தான வெற்றி பெற்றார். அப்போதே அவரை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். 
 
அவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக ஒன்றரை வருடத்தில் பல உலகப் போட்டிகள் தமிழ்நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன 
 
 எனவே அவர் முதலமைச்சர் துணையாக இருந்து தமிழ்நாட்டு வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழன் பிரசன்னா கூறியுள்ளார்.
 
Edited by Mahendran