வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (08:17 IST)

தமிழ்நாட்டின் வாக்கு சதவீதம் உண்மையில் எவ்வளவு? தேர்தல் ஆணையத்தின் குழப்பமான தகவல்..!

Election
தமிழ்நாட்டில் 72% வாக்குப்பதிவு நடந்ததாக நேற்று தெரிவித்த நிலையில் இன்று 69 சதவீதம் வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் தெரிவித்தது குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு 72% வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் 69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்றும் நேற்று வெளியான தகவல் உண்மை இல்லை என்றும் கூறப்படுகிறது
 
69.46 சராசரியாக தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அடைந்தாலும் அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 54.27 சதவீதமும் பதிவாகியுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் ,ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் 70% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்கு சதவீதம் என்ற முழு விவரங்கள் இதோ:
 
Edited by Mahendran