வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (19:40 IST)

அதிமுக கூட்டணிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு

admk -farmer Association
வரும் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புரட்சிப் பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியாகி, வேட்புமனுதாக்களும் நடைபெற்றன.
 
இந்த நிலையில், தேர்தலையொடி, எடப்பாடி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  ஆளுங்கட்சியாக திமுகவுக்கு எதிராகவும், மத்திய பாஜகவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து, விமர்சித்து வருகிறது.
 
இந்த நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து, விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
 
திமுக அரசு எவ்வித திட்டங்களையும், விவசாயிகளுக்கு செயல்படுத்தவில்லை. ஆனால், பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்தை அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி எனக் கூறி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
 
மேலும், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோகனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.