தொடர்புடைய செய்திகள்
- எடப்பாடியை முதல்வராக்க அண்ணாமலை பிரச்சாரம் செய்வாரா? 2026 தேர்தலில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பாரா?
- விஜய்யின் தவெக கூட்டணிக்கு பாமக, தேமுதிக வருமா? ஓபிஎஸ், அமமுக நிலை என்ன?
- காங்கிரஸ் கட்சி வர வாய்ப்பே இல்லை.. விஜய் காத்திருப்பது வீண்: அரசியல் விமர்சகர்கள்..!
- ஆவணங்களை கொண்டு வந்து உறுதி செய்யுங்கள்: சுமார் 13 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்..!
- விஜய் ஒரு பலி ஆடு!.. பின்னால் இருப்பது அந்த கட்சி!.. ஜேம்ஸ் வசந்தன் காட்டம்!...
25 தொகுதிகள் தான்.. காங்கிரசுக்கு கறாராக சொன்னதா திமுக.. தவெக கூட்டணிக்கு செல்லுமா?
திமுக-காங்கிரஸ் இடையிலான 20 ஆண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக தரப்பில் காங்கிரஸிற்கு வெறும் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2021 தேர்தலை போன்ற ஒரு நிலையையே மீண்டும் உருவாக்குவதால், காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் 'ஆட்சியில் பங்கு' வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், திமுக தலைமை இதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 'ஆட்சியில் பங்கு' என்ற வாக்குறுதியை அளித்துள்ளது காங்கிரஸை ஈர்க்கும் முக்கிய காரணியாக உள்ளது. கிரிஷ் சோடங்கருக்கு கட்சியின் ஒரு பிரிவினர் எழுதியுள்ள கடிதத்தில், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
இருப்பினும், டெல்லி மேலிடம் ராகுல் காந்தி - ஸ்டாலின் இடையிலான உறவை சிதைக்க விரும்பவில்லை. பிப்ரவரி 17-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகே, இந்த கூட்டணி மாற்றங்கள் குறித்த தெளிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
