சிறையில் பாட்டு பாடிய ராம்குமார்
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் சிறையில் சக கைதிகளுடன் சகஜமாக பேசி, பாட்டு பாடியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், மூன்று நாட்கள் போலீஸ் விசாரணை முடிவடைந்த நிலையில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராம்குமாரை குற்றவாளியாக நிரூபிக்க போதுமான ஆதராங்களை திரட்டியுள்ள காவல் துறையினர், தடவியல் ஆய்வு அறிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்ட பின்னர் 15 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராம்குமாரை தனி சிறையில் அடைத்தால் மனதளவில் பாதிப்பு ஏற்படும் என்ற மருத்துவரின் அறிவுரைப்படி ராம்குமாருடன் மேலும் இரு கைதிகளை அடைத்தனர். நேற்று முன்தினம் புழல் சிறைச்சாலை மருத்துவமனையில் ராம்குமாரின் கழுத்தில் தையல் பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராம்குமார் அவரது சிறையில் இருக்கும் சக கைதிகளிடம் சகஜமாக பேசியதுடன், அவர்களுக்கு பாட்டு பாடியும் காண்பித்துள்ளார்.