சட்டமன்றத்திற்கு மனைவி என்று கூறி அழைத்து சென்றார்: மணிகண்டன் குறித்து சாந்தினி

manikandan
சட்டமன்றத்திற்கு மனைவி என்று கூறி அழைத்து சென்றார்: மணிகண்டன் குறித்து சாந்தினி
siva| Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (19:25 IST)
என்னுடைய மனைவி என்று கூறி சட்டமன்றத்திற்கு என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அழைத்துச் சென்றார் என நடிகை சாந்தினி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகை சாந்தினி குறித்த பாலியல் வழக்கில் ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது சாந்தினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ’மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்ததாகவும் சட்டமன்றத்திற்கு மனைவி என்று கூறி சாந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ’மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் அவரது மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்ட போதும் நடிகைக்கு குறுந்தகவல் அனுப்ப பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் செல்வாக்கான நபர் என்பதால் சாட்சிகளை கலைக்க கூடும் என்றும் அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்இதில் மேலும் படிக்கவும் :