செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (16:36 IST)

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், கடந்த 4 ஆண்டுகளாக தனது பெண் உதவி நடன இயக்குநரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முதன்முதலாக 2020ல் மும்பைக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், தொடர்ந்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது 21 வயதாகும் நிலையில் அவர் தனது புகாரை அளித்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 17ஆம் தேதி, ஹைதராபாத் ராய்துர்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான ஜானி மாஸ்டரை காவல்துறையினர் கோவாவில் வைத்து கைது செய்தனர். 
 
ஜானி மாஸ்டர் மீது இந்திய குற்றவியல் சட்டம் பிரிவுகள் 376 (பாலியல் வன்முறை) மற்றும் 506 (மிரட்டல்), மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  
 
இந்த நிலையில் ஜானி மாஸ்டர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் , பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்முறையை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
Edited by Mahendran