ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் வீட்டில் பாலியல் தொழில்; சென்னையில் சிக்கிய கும்பல்!
சென்னையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் பாலியல் தொழில் நடந்த நிலையில் அந்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கும்பலாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை இலங்கையை சேர்ந்த நிர்மலா என்பவருக்கு வாடகைக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் காவல்துறையினர் மாறுவேடத்தில் அந்த வீட்டை கண்காணித்தனர்.
அப்போது வெளிநாட்டை சேர்ந்த சில பெண்கள் அந்த வீட்டில் தங்கியிருப்பதும் அந்த வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் வந்து போவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து உடனடியாக அந்த வீட்டில் சோதனை செய்ததில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் செல்போன் செயலின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த வீட்டிற்கு வருவதாகவும் அங்கு உள்ள பெண்களிடம் பாலியல் உறவு கொள்வதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டும் இன்றி கஞ்சா பொட்டலங்கள் செல்போன்கள், கார்கள் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த வீட்டில் இருந்த ஒன்பது பெண்கள் மீட்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Mahendran