1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (18:34 IST)

நவம்பரில் பள்ளி திறக்கப்படும் என்ற தகவல் தவறானது: அமைச்சர் செங்கோடையன்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நான்கு மாதங்களாக திறக்கப்படவில்லை என்பதும், எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை ஒரு சில ஊடகங்களில் வரும் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கபடுவார்கள் என்றும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஒரேயடியாக முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியானது 
 
இந்த நிலையில் இந்த தகவலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்றும் பெற்றோர் மனநிலையை அறிந்து கொரோனா தாக்கம் குறித்து ஆய்வு செய்த பின் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் பள்ளிகள் திறக்கும் நாள் குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்