திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (13:46 IST)

உதயநிதி அய்யா வரவேண்டும்.. செல்வபெருந்தகை.. உதயநிதி அண்ணன் வருவார்.. அமைச்சர் சேகர்பாபு..!

தனது தொகுதியில் சிவன் கோயில் திருப்பணி வேலையை நடத்த அனுமதி கொடுத்ததற்கு அறநிலையத் துறை அமைச்சருக்கு நன்றி கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை, இந்த கோவில் கும்பாபிஷேகத்தின் போது உதயநிதி அய்யா வரவேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த  அமைச்சர் சேகர்பாபு.  உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை ஏற்று நிச்சயமாக குடமுழுக்கு விழாவில் நானும் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதியும் கலந்து கொள்வோம் என்ற உறுதியை பேரவை தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.  

மேலும் அருமை அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது தொகுதியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயில் உள்பட அனைத்து திருக்கோயில் விசேஷங்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார், ஆகவே எங்களுக்கு இந்து மதம் எதிரான மதமல்ல, நாங்கள் ஆதரிக்கின்ற அரவணைக்கும் மதம்,   எனவே குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் எங்களது அண்ணன் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் என்பதை நம்முடைய உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Edited by Mahendran