ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (10:08 IST)

பல பேருடன் ரகசிய காதல்.. கண்டித்த கணவனை கொலை செய்து நாடகமாடிய ‘பலே’ மனைவி!

புதுச்சேரியில் கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவியே கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



புதுச்சேரி கோரிமேடு ஞானப்பிரகாசம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். பெயிண்டராக வேலை செய்து வரும் இவருக்கு ஷர்மிளா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஷர்மிளாவுக்கு பல ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதுடன், ரகசிய தொடர்பிலும் இருந்து வந்துள்ளார். இதை கண்டுபிடித்த பாஸ்கர், ஷர்மிளாவை கண்டித்துள்ளார்.

ஆனால் ஷர்மிளா தொடர்ந்து தனது கள்ளக்காதல் விவகாரங்களை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் சண்டையில் பாஸ்கரை ஷர்மிளா கழுத்தை நெறித்துள்ளார். இதனால் பாஸ்கர் மயக்கமடைந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


பின்னர் அவரை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. உடனே அவர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் கழுத்தை நெறித்துக் கொன்றதை ஷர்மிளா ஒப்புக் கொண்டுள்ளார். ஷர்மிளாவை கைது செய்துள்ள போலீஸார் இந்த விவகாரத்தில் ஷர்மிளாவின் கள்ளக்காதலர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்..

Edit by Prasanth.K