வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (14:46 IST)

6 நாட்களில் ரூ.15 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்! – சத்ய ப்ரதா சாகு தகவல்!

தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து 15.20 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பரிசுபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 26ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், கட்சி சார்பில் பரிசு பொருட்கள் அளித்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 6 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆவணங்களின்றி பணம், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியுள்ளது. கடந்த 6 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருட்களின் மொத்த மதிப்பு 15.20 கோடி ரூபாய் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.