ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (18:23 IST)

கோவை திரும்பிய சத்குரு..! கதறி அழுது வரவேற்ற பெண்கள்..!!

Sathguru
டெல்லியில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்ட சத்குரு, சிகிச்சை முடிந்து விமானம் மூலம் கோவை திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு கண்ணீர் மல்க அவரை வரவேற்றனர்.
 
கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு கடந்த 17ஆம் தேதி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
 
இதை தொடர்ந்து மதுத்துவமனையில் 10 நாள் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த 27ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் நான்கு நாட்கள் டெல்லியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சத்குரு இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். 

கோவை விமான நிலையத்தில் திரண்ட ஈஷா தன்னார்வலர்கள் விவசாய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சத்குருவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு பதாகைகளை கையில் ஏந்தி ஒரு தரப்பினரும் பெண்கள் தங்கள் கைகளில் திருவிளக்கையும் மலர் தட்டுகளையும் ஏந்தியும் வரவேற்பு அளித்தனர். அப்போது ஆண்களும் பெண்களும் கண்ணீர் மல்க கதறி அழுது சத்குருவை வரவேற்று ஈஷாவிற்கு அனுப்பி வைத்தனர்.