வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2024 (11:27 IST)

தொழில் முனைவோர்களாகும் தூய்மைப் பணியாளர்கள்! - முதல்வர் தொடங்கிய புதிய திட்டம்!

MK Stalin sanitation workers welfare scheme

இன்று அம்பேத்கர் பிறந்தநாளில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக்கும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

 

இந்திய அரசியலைப்பு சட்டத்தை உருவாக்கியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக போராடியவருமான அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளில் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை சிறப்பாக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 
 

 

அதன் பின்னர் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் “எனக்கு தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர் என்று கூறியவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கரின் புகழை கலைஞர் எப்படியெல்லாம் போற்றினார் என்பதற்கு பெரிய பட்டியலே உள்ளது. 1972ம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக அம்பேத்கர் பெயரில் அரசுக் கல்லூரி. 1989ல் சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. 1990ம் ஆண்டு அம்பேத்கர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சட்டப் பல்கலை.க்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது.

 

அரசியல், பொருளாதாரம் என அனைத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம்

 

இத்தனை திட்டங்கள் வேறு எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை. தூய்மை பணியாளர்கள் என்று சொல்வதைவிட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K