வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified புதன், 23 நவம்பர் 2022 (18:18 IST)

தமிழக சாலைகளை செம்மைப்படுத்த ரூ.2200 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

cm stalin
தமிழக சாலைகளை செம்மைப்படுத்தி சீர்திருத்த ரூ.2200 கோடி நிதி ஒதுக்குவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
அடுத்த 4 ஆண்டுகளில் சாலை மேம்படுத்தப்படும் என்றும் அதற்காக ரூ.2200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலைகளை மேம்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் 1600 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் ரூபாய் 1171 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran