பல்வேறு துயரச் சம்பவங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (14:58 IST)

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறார்.

அதன்படி தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிய முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :