திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (16:14 IST)

ஓய்வு பெற்ற ஐ.ஜி, பொன்.மாணிக்கவேலுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவி; ஐஜியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகளை தாயகத்திற்கு மீட்டு கொண்டு வந்தார். இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற ஓய்வு பெற்ற ஐ.ஜி, பொன்.மாணிக்கவேல் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நண்பர் ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, தஞ்சையில் உள்ள நண்பர்களை சந்திக்க பொன்.மாணிக்கவேல் வந்திருந்ததாகவும், அப்போது திடீரென  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் தெரிகிறது
 
இதையடுத்து அவருடைய நண்பர்கள் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி  சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.