ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (13:55 IST)

ரூ.800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் நிலம் மீட்பு

chennai
சென்னையில் கிண்டி கத்திப்பாராவில் உள்ள ரூ.800 கோடி மதிப்புடைய நிலம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ள 4.5 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  செங்கல்பட்டு ஆட்சியரரின் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆக்ரமிப்பு நிலத்தை மீட்டனர்.

இந்த நிலத்தில் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இயங்கி வந்த அரசுடையை வங்கி, கிறிஸ்தவ மதப் பிரச்சார கூட, வீடுகள் உள்பட 30 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.