திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (11:36 IST)

அதே நடை.. அதே ஸ்டைல்..! – சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த்!

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் அவர் நடந்து வரும் வீடியோ வைரலாகியுள்ளது.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் கடந்த 19ம் தேதி காலை அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்புவார் என கூறப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து முடித்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திறங்கினார் நடிகர் ரஜினிகாந்த். எப்போதும் போல அதே நடை, அதே ஸ்டைலுடன் ரஜினிகாந்த் வணக்கம் தெரிவித்து, கை காட்டி சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.