ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 ஜூன் 2019 (12:28 IST)

அதிமுக வுக்கு ஒரேத் தலைமை தேவை – ராஜன் செல்லப்பா போர்க்கொடி !

அதிமுகவுக்கு ஒரேத் தலைமை வேண்டும் எனவும், கழகம் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு இருந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் எனவும் ராஜன் செல்லப்பா கூறி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

அதிமுக வின் முக்கியத் தலைவர்களில் மதுரை ராஜன் செல்லப்பாவும் ஒருவர். இன்று செய்தியாளர்களை சந்தித்த் அவர் அதிமுகவின் தோல்வி குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதில் ‘ அதிமுகவுக்கு ஒரேத் தலைமை தேவை. யார் கையில் அதிகாரம் உள்ளது என்றே தெரியவில்லை. ஜெயலலிதா போல் கழகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம்.

கழகத்துக்கு பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டும். ஜெயலலிதாவை விட அதிகளவில் நலத்திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார். அவரை பொதுச்செயலாளராக நியமிப்பது குறித்து பொதுக்குழுதான் முடிவு செய்யவேண்டும். தமிழக மக்கள் மனதில் திமுக, அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகள்தான் உள்ளன என்பதை தேர்தல் அறிவித்து விட்டது. தினகரன் எனும் மாயை இப்போது இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.