தொடர்புடைய செய்திகள்
- முடிந்தது மழை..? வெளுக்கப்போகும் வெயில்? இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்! - வானிலை ஆய்வு மையம்!
- இன்றும், நாளையும் வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?
- தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வெளியேறுங்கள்.. தூத்துகுடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!
- 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- மார்ச் 11ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு! வெயிலும் இருக்கும்! - சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு சில பகுதிகளில் மழை பொழிவும், பல பகுதிகளில் வெப்பமும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் ஏற்கனவே பல பகுதிகளில் வெயில் சதமடித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வளிமண்டல சுழற்சியால் பல மாவட்டங்களில் பெய்த மழையால் பூமி குளிர்ச்சியடைந்து மக்கள் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில் இனி வரும் நாட்களுக்கான வானிலை தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் 22ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இன்று முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றும், தற்போதுள்ள வெப்பநிலை அளவே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் 20ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K
