ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (16:24 IST)

தலைமை பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம்! – மதுரையில் பரபரப்பு!

Strike
15 ஆவது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்க போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்கிறது.


 
தொழிற்சங்கங்களுடன் அரசு  நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து நேற்று முதல் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.


 
அரசுக்கு ஆதரவாக செயல்படும் தொழில் சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்களை வைத்தும், தற்காலிகமாக  எடுக்கப்பட்ட ஓட்டுநர் நடத்துனர் வைத்தும் பேருந்துகளை இயக்கி வரும் சூழ்நிலையில் சிஐடியு எஐடியூசி. டிடிஎஸ்எப், எச் எம்எஸ், உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று மதுரை பொன்மேனி தலைமை போக்குவரத்து பணிமனை முன்பு மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்‌.

பின்னர் சாலையில் அமர்ந்து போராடினர். போரட்டகாரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.