கூட்டணியா? தனித்து போட்டியா? பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பதில்

Last Modified செவ்வாய், 27 நவம்பர் 2018 (12:09 IST)
தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களுக்கு கூட்டணி அமைக்க தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் வரும் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவின் பங்கு கணிசமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் வரும் தேர்தல்களில் கூட்டணியா? தனித்து போட்டியா? என்பது குறித்து கருத்து கூறிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'தேர்தல் தேதி அறிவித்த பிறகே தேமுதிக தனித்துப் போட்டியா, இல்லை கூட்டணியா என முடிவு செய்யும். மேலும் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார்' என்று கூறினார்.


மேலும் புயல் போன்ற காரணங்களை கூறி தேர்தலுக்கு ஆளுங்கட்சி முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், தேர்தலை சந்திக்க அதிமுக அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :