1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (14:30 IST)

தூத்துக்குடி நிலவரம் : ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு

தூத்துக்குடியில் அண்ணாநகர் பகுதியில் ஆளில்லா பறக்கும் விமானம் மூலம் கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.  இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் கடந்த 24ம் தேதி பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசாரை பொதுமக்கள் கற்கள் கொண்டு தாக்கும் வீடியோக்கள் வெளியானது. 
 
கலவரங்கள் தொடராமல் தடுக்க, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பி வருகிறது. தூத்துக்குடிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்.  
 
இதையடுத்து, மெல்ல மெல்ல அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. நான்கு நாட்களாக அடைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று திறக்கப்படும் எனவும், பேருந்துகள் இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதோடு, அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் 3க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினால் அதை கண்காணித்து கலவரங்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.