ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (12:28 IST)

கதிராமங்கலத்தில் மக்கள் தான் போலீஸை தாக்கினார்களாம்: எடப்பாடி அடடே விளக்கம்!

கதிராமங்கலத்தில் மக்கள் தான் போலீஸை தாக்கினார்களாம்: எடப்பாடி அடடே விளக்கம்!

ஓஎன்ஜிசி எண்ணை நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் பொதுமக்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் 12 இடங்களில் எண்ணை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக எண்ணை குழாய்களை மாற்றி வருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம். இதனால் எண்ணை கசிவு ஏற்பட்டு அந்த பகுதியின் குடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீரின் நிறம் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த எண்ணைக்கசிவால் கதிரமாங்கலம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர், நிலத்தடி நீர் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் கடந்த 2 மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய் கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்களின் அந்த போராட்டத்தில் தடியடி நடத்தி பலரையும் கைத்து செய்தனர் போலீசார்.
 
போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கைது செய்ததை சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்து வருகின்றனர். அரசுக்கு எதிராக பலரும் கருத்துக்களை இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 
அதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது. இன்று சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
 
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கதிராமங்கலத்தில் மக்களில் சிலர் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர் என்று கூறி மொத்த பழியையும் மக்கள் மீது வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். வைக்கோலை சாலையில் போட்டு தீ வைத்து, அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்ததாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் கற்களை வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.