மருந்து வாங்கதாங்க காசு இருக்கு..! அபராதம் வசூலித்த காவலர்கள்! –முதல்வர் கவனத்திற்கு சென்றதால் நடவடிக்கை!

Prasanth Karthick| Last Modified திங்கள், 17 மே 2021 (11:07 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் மகனுக்கு மருந்து வாங்க சென்ற தந்தையிடம் போலீசார் அபராதம் வசூலித்த நிலையில் முதல்வர் தலையீட்டால் பணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பலர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி வருவதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும் தொடர்கிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது மாற்று திறனாளி மகனுக்கு மருந்து வாங்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

தன்னிடம் ரூ.1000 மட்டுமே உள்ளதாகவும் தனது மகனுக்கு மருந்து வாங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அவரிடமிருந்து காவலர்கள் ரூ.500 அபராதம் பெற்றுள்ளனர். இதனால் மருந்து வாங்க முடியாமல் திரும்பிய அவர் இதுகுறித்து ட்விட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் சம்பந்தப்பட்ட நபரை நேரில் சென்று சந்தித்து அபராத தொகையை திரும்ப அளித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :