ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (12:44 IST)

வடலூரில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு... சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு..!

Seeman
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான் அறிவித்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் கட்சி சார்பில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
 
முன்னதாக  வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன்பு அமைந்துள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்குகளின் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 106 ஏக்கர் பெருவெளி நிலம் வள்ளலாருக்கு சொந்தமானது.
 
வள்ளலார் சர்வதேச மையம் அருகே ரூ.99.90 கோடி செலவில், 500 பேர் அமரும் வகையிலான தியான மண்டபம், தர்மசாலை புதுப்பிப்பு, டிஜிட்டல் நூலகம், கழிவறை, சாலை வசதி, பக்தர்கள் தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran