பப்ஜி மதனுக்கு 2 நாட்கள் காவல்: முக்கிய தகவல் வெளிவருமா?

madhan
madhan
siva| Last Updated: புதன், 23 ஜூன் 2021 (12:15 IST)
பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறையினருக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த இரண்டு நாளில் பல முக்கிய விஷயங்கள் அவரிடம் இருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இரண்டு யூடியூப் சேனல்கள் நடத்தி அதன் மூலம் ஆபாசமாக பேசி சிறுவர் சிறுமிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை அடுத்து பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

இந்த நிலையில் மதனை காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி கேட்ட நிலையில் இரண்டு நாள் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதனை அடுத்து சிறையில் இருக்கும் மதனை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்

இந்த விசாரணையில் அவருக்கு வேறு ஏதேனும் யூடியூப் சேனல் இருக்கின்றதா? சமூக வலைதளங்களில் இருக்கின்றதா? அவர் யூடியூப் மூலம் சம்பாதித்த பணம் எவ்வளவு? அந்த பணத்தை அவர் என்ன செய்தார்? என்பது போன்ற தகவல்களை பெற காவல்துறையினர் முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மேலும் படிக்கவும் :