வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (15:34 IST)

+2 முடித்து கல்லூரி போகாத மாணவர்கள்! 8 ஆயிரம் பேர் லிஸ்ட்..! – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Pallikalvithurai
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு செல்லாத மாணவர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்தது. ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டிகிரி, டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

தேர்ச்சியடையாத மாணவர்களும் மறுதேர்வு எழுதி மேற்படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் 12ம் வகுப்பு முடித்து உயர் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் குறித்து கணக்கெடுத்தபோது 8,588 மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னரும் எந்த மேற்படிப்புகளிலும் சேரவில்லை என தெரியவந்துள்ளது.

அந்த மாணவர்களின் விவரங்களை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரையும் தொடர்பு கொண்டு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.