திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூன் 2024 (08:53 IST)

மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமானதாக இல்லை: ப சிதம்பரம்

Chidambaram
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மாணவ மாணவிகளுக்கான இலவச சைக்கிள் திட்டம் மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற  நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம், தமிழ்நாடு அரசு வழங்கும் சைக்கிள்களில் தரம் இல்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்
 
இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன் 
 
சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே? 
 
இந்தத் தரமில்லாத சைக்கிள்களத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
 
Edited by Mahendran