இந்தியா இதில் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும்.. ரிஷி சுனக் குறித்து ப சிதம்பரம்!
இந்திய வம்சாவளி தலைவரான ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்
அவர் இதுகுறித்து கூறியதாவது: அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளில் பெரும்பான்மை இல்லாத குடிமக்களை அரவணைத்து அரசாங்கத்தில் உயர் பதவிகளை தேர்ந்தெடுத்துள்ளனர்
முதலில் அமெரிக்காவில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இங்கிலாந்தில் ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இந்தியாவும் பெரும்பான்மை வாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Edited by Mahendran