செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (18:34 IST)

இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு !

hindu temple
தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. இதில், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில்,  தமிழக  சுற்றுலாத்துறையுடன் இணைந்து  இந்து அற நிலையத்துறை சார்பில் ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,  வைணவ கோயில்களுக்கு பக்தர்களை ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வரும் புரட்டாசி மாதம் பக்தர்கள் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்புகிற  பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளமான www.ttdcoomline.com என்ற இணையதளத்திற்கு   சென்று  பதிவு செய்ய வேண்டும்.

மேலும், தொடர்புக்கு 044-25333333,25333444  என்ற தொலைபேசி எண்களில் இதுகுறித்த விவரங்கள் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.