செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 நவம்பர் 2025 (11:49 IST)

ஓபிஎஸ் கூடாரம் காலி.. இருந்த ஒரே ஒரு பிரமுகரும் திமுகவில் இணைந்தார்..!

ஓபிஎஸ் கூடாரம் காலி.. இருந்த ஒரே ஒரு பிரமுகரும் திமுகவில் இணைந்தார்..!
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளரும், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன், இன்று காலை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவர் தன்னை இணைத்துக்கொண்டார். தி.மு.க.வில் இணைந்ததை தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்குத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், "தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலினை ஏற்று தி.மு.க.வில் இணைந்தேன். அ.தி.மு.க. பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக செயல்படுகிறது," என்று விமர்சித்தார்.
 
ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் விலகியதால், ஓ.பி.எஸ். கூடாரம் காலியாகிவிட்டதாக விமர்சனம் செய்யப்படுகிறது.
 
Edited by Mahendran