திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (23:32 IST)

பாஜக கட்சியின் நிறுவன நாளை முன்னிட்டு நீர் மோர் பந்தலை திறப்பு

Opening of Neer Mor Bandala on the eve of BJP's founding day
பொதுமக்களின் தாகத்தினை தீர்க்கவும், பாஜக கட்சியின் நிறுவன நாளை முன்னிட்டும் கரூர் மாவட்டத்தில் இரு இடங்களில் நீர் மோர் பந்தலை திறந்த கரூர் மாவட்ட பாஜக.
 
நாடு முழுவதும் பாஜக கட்சியின் 42 வது நிறுவன நாள் கொண்டாடப்படும் நிலையில், கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட அளவில் நடைபெற்றன. அதில், கோடை வெயிலை சமாளிக்க மக்களுக்கு நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் முன்பும், குளித்தலையிலும் இன்று கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் துவக்கி வைத்தார். இதில், நீர் மோர், தர்பூசணி, வெள்ளரிபிஞ்சுகள், இளநீர் ஆகியவைகள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் பேசிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன், எங்கள் கட்சியின் 42 வது நிறுவன நாளை முன்னிட்டும், கரூர் மாவட்ட மக்களை கோடை வெயிலில் இருந்து காக்க வேண்டி, மாநில தலைவர் அண்ணாமலை அவர்களது உத்திரவின் படியும், அவர்களது ஆலோசனையின் படியும் கரூர் மாவட்டத்தில் இரு இடங்களில் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நீர் மோர் பந்தல் கோடை வெயில் காலம் முடியும் வரை செயல்படும் என்றும், ஏழை, எளிய மக்கள் தங்களது தாகத்தினை போக்க இந்த நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபிநாத், ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் செல்வம், மாவட்டச் செயலாளர் டைம்ஸ் சக்தி, இலாலாபேட்டை முருகானந்தம், தரகம்பட்டி கைலாசம், அரவக்குறிச்சி பரணிதரன், மத்திய நகரம் கார்த்திகேயன், செல்வம் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.