1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (15:57 IST)

கோவிலில் நடைபெறும் திருமணங்களில் 10 பேர் மட்டுமே அனுமதி – இந்து அறநிலையத்துறை

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் இப்பெருந்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு வழிகாட்டு வழிமுறைகளை வெளியிட்டதுடன், சானிடைசர் பயன்படுத்தவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் முகக்கவசம் பயன்படுத்தவும் கூறியுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகக் கோயில்களில் திருமணம் நடைபெறும்போது, அதிகப்பட்சம் 10 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனவும், கோவில் மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களில் சுமார் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமென தமிழக  இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.