திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (16:30 IST)

பாஜகவில் இணையும் மேலும் ஒரு எம்.எல்.ஏ? என்ன ஆச்சு திமுகவுக்கு?

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் கிட்டத்தட்ட பாஜகவில் இணைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்று பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் ஸ்டாலின் குறித்து சில குற்றச்சாட்டுகளை கூறியதும் பாஜக தலைவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கு.க.செல்வம் எம்.எல்.ஏ அதிகாரபூர்வமாக பாஜகவில் சேர்ந்ததாக செய்தி வெளியாகவில்லை என்றாலும் பாஜகவின் ஒரு அங்கமாகவே அவர் மாறிவிட்டதாக கருதப்படுகிறது. இதனை அடுத்தே திமுகவில் இருந்து அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வத்தை அடுத்து மேலும் ஒரு எம்எல்ஏ பாஜகவில் சேர இருப்பதாகவும் இது குறித்த ரகசிய பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த எம்எல்ஏ அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவர் என்பதும் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி மேலும் இரண்டு திமுக எம்பிகளும் பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது ஒரு எம்எல்ஏ கூட மாற்றுக் கட்சிக்கு மாறியதாக சரித்திரம் இல்லை என்றும், ஆனால் மு க ஸ்டாலின் தலைமை பொறுப்பு ஏற்றதில் இருந்து கட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டு இருப்பதாகவும் திமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது