தொடர்புடைய செய்திகள்
- ரோலக்ஸுக்கு தம்பி நீங்கதான்… பிரபல நடிகரின் மகனிடம் நடந்த மோசடி!
- திடீரென வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட்.. அதிர்ச்சி அடைந்த சென்னை பார்மஸி ஊழியர்..!
- அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பணமோசடி புகார்.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!
- வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கு: 15 லட்சம் பக்கங்களில் குற்றப்பத்திரிகை
- பத்திரப்பதிவில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை! – அமைச்சர் எச்சரிக்கை!
தயாநிதி மாறன் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி.. காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
திமுக எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டதை அடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியிடம் ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொலைபேசியில் அழைத்து மோசடி செய்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும், அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் தெரிகிறது.
மேலும் ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை அழைத்த பின், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி செய்து உறுதி அளித்துள்ளதாகவும் விரைவில் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி இணைப்பு கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுக் கொடுப்போம் என்று கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran
