1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2017 (11:07 IST)

குமரி அருகே ஓகி புயல்: வர்தா போல் சேதம் உண்டாகுமா?

கன்னியாகுமரி அருகே புயல் மையம் கொண்டிருப்பதாகவும், இந்த புயலுக்கு ஓகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் இந்திய வானிலை மையம் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசி வரும் இந்த புயல்காற்று குமரி கடலோர பகுதி வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து திருவனந்தபுரம் கடல் பகுதிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
எனவே இந்த புயல் வர்தா புயல் போல் ஊருக்குள் வந்து சேதப்படுத்தாது என்றும் இருப்பினும் குமரி கடலோர பகுதியில் பெரிய மரங்கள் வேறோடு வீழ்ந்து கீழே விழ வாய்ப்பு இருப்பதால் மரங்களின் கீழ் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
மேலும் குமரி, திருச்செந்தூர் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.