செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (15:15 IST)

வாகனத்தின் நம்பர் ப்ளேட்டுகளில் எண் மட்டுமே இடம்பெற வேண்டும்- நீதிமன்றம் உத்தரவு

இரு சக்கரவாகனத்தில் சட்ட விதிகளை மீறி  நம்பர் பிளேட் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக நிர்வாகி மனுதாக்கல்  செய்திருந்தார்.
 

அரசு விதிமுறைகளின்படி, வாகனத்தின்  நம்பர் ப்ளேட்டுகளில் எண் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும், அரசியல் கட்சி தலைவர்கள், பெயர்கள் இடம்பெறக் கூடாது என உயர்  நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

வாகன  நம்பர் பிளேட்டில் அரசியல்  தலைவர்களின் படங்கள் ஒட்டுவதற்கு எவ்வாறு அனுமதிகப்படுகிறது?எனக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், மண்டல போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, மோட்டார் வாகன விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் அதிக அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  நீதிபதிகளை மிரட்டும் தொனியில்  இந்த மனு உள்ளதாகக் கூறி கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், பாஜக நிர்வாகிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Edited by Sinoj