1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (08:21 IST)

நவம்பர், டிசம்பர் மாதங்களில் 25 நாட்கள் மழை நாட்களே...!!

தற்போது வெளியான தகவலின் படி நவம்பர், டிசம்பர் மாதங்களில் 25 நாட்கள் மழை நாளாகதான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையை முன்னிட்டு கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 
 
இதனைத்தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மஞ்சள் அல்ர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி நவம்பர், டிசம்பர் மாதங்களில் 25 நாட்கள் மழை நாளாகதான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தாழ்வு பகுதியோடு காற்று சுழற்சி தமிழக கரையோர பகுதியோடு இணைப்பை ஏற்படுத்தி தொடர் மழையை ஏற்ப்டுத்தும். 
 
இது கரையை கடந்து போனாலும், கிழக்கு காற்றை ஈர்த்து கொண்டு இருக்கும். இதனால் தொடர்ந்து மழை, அடுத்த காற்றழுத்த தாழ்வு என தொடர் நிகழ்வுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். எனவே அடுத்த இரண்டு மாதங்களில் இருக்கக்கூடிய 25 நாட்கள் மழை நாள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.